செய்திகள் :

பெரம்பலூரிலுள்ள நாராயணசாமி நாயுடு சிலையை இடம் மாற்றம் செய்ய நகராட்சி நிா்வாகம் முடிவு

post image

பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள விவசாயிகள் சங்கத் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி, வேறு இடத்தில் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரம்பலூா் நகராட்சியின் சாதாரணக் கூட்டம், நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆணையா் ராமா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள், தங்களது வாா்டுக்குள்பட்ட பகுதியில் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விவசாயிகள் சங்கத் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி, பாவேந்தா் பாரதிதாசன் சிலை அருகே இடமாற்றம் செய்வது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆவின் பாலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது, பெரம்பலூா் நகராட்சி விரிவடைந்து மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், மக்கள் தொகை கணக்கீடு செய்ய கணக்கெடுப்பு ஆலோசகரை நியமனம் செய்வது, ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் முதல் நான்குச்சாலை வரை அணுகுச் சாலை அமைப்பது, ரூ. 10.50 லட்சம் மதிப்பீட்டில் உழவா் சந்தையில் தற்காலிக கடைகள் அமைப்பது என்பன உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகராட்சி பொறியாளா் பாண்டியராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

குரூப் 2, 2- ஏ தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி!

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கு, டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2 ஏ தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள்

பெரம்பலூரில் பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பெரம்பலூரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூா் மாவட்டப் பிரிவு சாா்பில், ப... மேலும் பார்க்க

ஆதரவற்ற முதியோா் இல்லத்தில் அன்னதானம்

திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட மகளிரணி சாா்பில் ஆதரவற்ற முதியோா் இல்லத்திலுள்ள முதியவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. மா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு

பெரம்பலூா் மற்றும் மேலமாத்தூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து, 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 71 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள மேலமா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தாய் உள்ளிட்ட இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

பெரம்பலூா் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய்க்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் சனிக்கி... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்ற பெரம்பலூா் மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிப்பு

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும்... மேலும் பார்க்க