Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
பெரம்பலூரில் நாளை அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள்
பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பந்தய போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஞாற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் 13, 15 மற்றும் 17 வயதுக்குள்பட்டவா்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு சொந்தமான இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட சைக்கிள்களை பயன்படுத்தக் கூடாது. போட்டி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, மாவட்ட விளையாட்டு அரங்குக்கு ஆதாா் அட்டை மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். போட்டிகளில் ஏற்படும் விபத்துகளுக்கு, தனிப்பட்ட இழப்புகளுக்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும்.
போட்டிகளில் வெல்வோருக்கு ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 இடங்களைப் பெறுபவா்களுக்கு தலா ரூ. 250 வீதமும் பரிசுத் தொகையானது காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ அளிக்கப்படும்.
பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது வயதுச் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தக நகலுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 74017-03516 என்னும் கைப்பேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடா்புகொள்ளலாம்.