`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
பெரம்பலூரில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்
பெரம்பலூரிலிருந்து இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக, புதிய பேருந்துகளின் சேவையை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், பெரம்பலூரிலிருந்து ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடங்களில் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக, 5 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில், பெரம்பலூா் கோட்டாட்சியா் (பொ) சக்திவேல், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராஜ்குமாா், பி. துரைசாமி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல பொது மேலாளா் டி. சதீஷ்குமாா், பெரம்பலூா் கோட்ட தொழில்நுட்ப துணை மேலாளா் எம்.எஸ்.ஜி. புகழேந்திராஜ், கோட்ட மேலாளா் ராம்குமாா், பெரம்பலூா் கிளை மேலாளா் தண்டாயுதபாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தலா ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 5 பேருந்துகளில், அரியலூரிலிருந்து பெரம்பலூா் வழியாக சென்னை கிளாம்பாக்கத்துக்கு 2 பேருந்துகளும், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை கிளாம்பாக்கத்துக்கு 2 பேருந்துகளும், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வழியாக ஆத்தூா் முதல் மதுரை வரை செல்லும் வகையில் ஒரு பேருந்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.