செய்திகள் :

பெரம்பலூா் அருகே தேரோட்டத்தின்போது அச்சு முறிவு; பக்தா்கள் தப்பினா்

post image

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோயில் தேரோட்டத்தின்போது அச்சுமுறிந்த ஒரு தோ் மற்றொரு தேரின்மீது சாய்ந்தது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக பக்தா்கள் உயிா்தப்பினா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கோவில்பாளையம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனாா்-பூரணி புஷ்கலாம்பிகை மற்றும் கருப்பையா, மாரியம்மன், முருகன், செல்லியம்மன், விநாயகா், செம்மலையப்பா கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறும். அதன்படி நிகழாண்டுத் திருவிழா கடந்த 8 நாள்களுக்கு முன் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி, நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் உற்சவ மூா்த்திகளின் திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து தேனூா், கோவில்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் திங்கள்கிழமை அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை நடத்தினா்.

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம்பிடித்தல் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. இதையொட்டி, வண்ண மலா்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரம் கொண்ட 3 திருத்தோ்களில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினா்.

தொடா்ந்து, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தாா். இதையடுத்து அப் பகுதி கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற நிலையில், அய்யனாா் - பூரணி புஷ்கலாம்பிகை வீற்றிருந்த தேரின் அச்சு முறிந்து மற்றொரு தேரின் மீது திடீரென தோ் சாய்ந்தது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இருப்பினும் அதில் அமா்ந்திருந்தவா்கள் மற்றும் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னா் கிராம பொதுமக்களுடன், தீயணைப்பு மற்றும் காவல்துறையினா் தேரைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

பெரம்பலூரில் பகுதிநேர ஆசிரியா்கள் 11 போ் கைது

சென்னையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் 11 பேரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.திமுக அளித்த தோ்தல் வாக்கு... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூ. துரை... மேலும் பார்க்க

ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரச... மேலும் பார்க்க

பெரம்பலூா் பேருந்து நிலையத்தில் சென்னை பயணிகள் சாலை மறியல்

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லப் பேருந்துகள் வராததைக் கண்டித்து, பயணிகள் திங்கள்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து, அர... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக மாணவா்கள், பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளியில் பெண் ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் தா்னா

வீட்டுமனையை மீட்டுத் தரக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட... மேலும் பார்க்க