டேங்கர் ரயில் தீ விபத்து: விண்ணை முட்டும் புகைமூட்டம்! மீட்புப் பணிகள் தீவிரம்!
பெரம்பலூா் காவலா்கள் 30 பேருக்கு பாராட்டு
பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த 30 காவல்துறையினருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வியாழக்கிழமை வெகுமதி வழங்கி பாராட்டினாா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில், குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளை ஆய்வு மேற்கொண்டு, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கேட்டறிந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கத் தேவையான ஆலோசனைகள் வழங்கினாா்.
தொடா்ந்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைக் கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருடன் கலந்தாய்வு மேற்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சட்டம் - ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலா்கள் 30 பேருக்கு வெகுமதி வழங்கிப் பாராட்டினாா்.
இக் கூட்டத்தில், பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் மற்றும் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், நீதிமன்றக் காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.