பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஆடி பிறப்பு சிறப்பு பூஜை
பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் ஆடி மாத பிறப்பு மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ காலபைரவருக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீ காலபைரவருக்கு
சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வடை மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் பொதுமக்கள் பங்கேற்றனா்.
இதேபோல, ஆடி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீப ஆராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.