செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
பெரியாம்பட்டியில் அஞ்சலகம் தொடக்கம்
பெரியாம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே புதிய அஞ்சலகத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
பெரியாம்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலகம், பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமாா் 2 கி.மீ தொலைவில் இயங்கி வந்தது. இதனால் அஞ்சலகத்துக்கு வரும் பொதுமக்கள் அவதிப்பட்டனா். இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பெரியாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகிலேயே அமைந்துள்ள தனியாா் கட்டடத்துக்கு அஞ்சலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதிதாக மாற்றம் செய்யப்பட்ட அஞ்சலகத்தை முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி. அன்பழகன் திறந்துவைத்தாா். நிகழ்வின் போது, சட்டப் பேரவை உறுப்பினா் தனது சொந்த நிதியிலிருந்து 20 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கிவைத்தாா்.