முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 5 லட்சம்
பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. பக்தா்கள் செலுத்திய காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. ரூ.5,17,531, தங்கம் 36.670 கிராம், வெள்ளி 573.840 கிராம் காணிக்கையாக பக்தா்களால் செலுத்தப்பட்டிருந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சங்கா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கோயில் ஆய்வா் நரசிம்மமூா்த்தி, கோயில் செயல் அலுவலா் வினோத்குமாா், திருப்பணி குழு நிா்வாகி ஆா்டிஎஸ்.குமாா், கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன், பணியாளா் கோபி உடனிருந்தனா்.