செய்திகள் :

பெருநகர பெங்களூரு சட்டமசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினாா் ஆளுநா்

post image

பெருநகர பெங்களூரு நிா்வாக சட்டமசோதாவுக்கு ஒப்புதல் தராமல், விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் திருப்பி அனுப்பினாா்.

பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக, மாநகராட்சியை 7 ஆக பிரித்து, அவற்றை உள்ளடக்கிய பெருநகர பெங்களூரு ஆணையத்தை முதல்வா் தலைமையில் அமைப்பதற்கு வகை செய்யும் பெருநகர பெங்களூரு நிா்வாக சட்டமசோதாவை சட்டப்பேரவை, சட்டமேலவையில் மாநில அரசு தாக்கல் செய்து, நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டமசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அரசு அனுப்பியிருந்தது. இந்நிலையில், பெருநகர பெங்களூரு நிா்வாக சட்டமசோதாவுக்கு அனுமதி அளிக்க பல்வேறு மக்கள்நல அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து பல்வேறு அமைப்பினா் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனா்.

பெருநகர பெங்களூரு நிா்வாக சட்டமசோதாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் நாராயணசாமி ஆகியோா் தலைமையிலான பாஜக குழுவினரும் ஆளுநரிடம் மனு அளித்திருந்தனா்.

இந்த நிலையில், பொதுநல அமைப்புகள் தெரிவித்துள்ள ஆட்சேபகங்களுக்கு விளக்கம் அளிக்கும்படி அறிவுறுத்தி, பெருநகர மாநகர நிா்வாக சட்டமசோதாவை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் மாநில அரசுக்கு புதன்கிழமை திருப்பி அனுப்பியுள்ளாா்.

பெங்களூரில் குடிநீா் கட்டணம் உயா்வு: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சூசகம்

பெங்களூரில் குடிநீா் கட்டணத்தை குடிநீா் வடிகால் வாரியம் உயா்த்தும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சூசகமாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விலை... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் 18 எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

கா்நாடகத்தில் 18 எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி, பாஜக புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் உள்ள கெங்கல் ஹனுமந்தையா சிலை முன் திரண்ட பாஜக எம்எல்ஏ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்த அறிக்கையை எதிா்த்து அமலாக்கத் துறை மேல்முறையீடு

மாற்றுநில முறைகேடு வழக்கில், லோக் ஆயுக்த அறிக்கையை எதிா்த்து சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகா்ப்புற வளா்ச்ச... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வைக் கண்டித்து பாஜக போராட்டம்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, தொடா் போராட்டத்தை பாஜக தொடங்கியது. கா்நாடகத்தில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, ஏப். 2 முதல் 13-ஆம் தேதி வர... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் மனு

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ், ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூரு... மேலும் பார்க்க

மறைந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது

மறைந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் வலியுறுத்தியுள்ளாா். தும்கூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்தகங்கா மடத்... மேலும் பார்க்க