கீழடி குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட மோடிக்கு மனமில்லை: மு.க.ஸ்டாலின்
பெருந்துறையில் ரூ. 4.11கோடி கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ரூ 4.11 கோடிக்கு கொப்பரை ஏலம், புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 4,267 மூட்டைகளில், ஒரு லட்சத்து 87 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 223.90 க்கும், அதிகபட்சமாக ரூ.242.59 க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக, ரூ. 40.40 க்கும், அதிகபட்சமாக ரூ.236.10 க்கும் விற்பனையாயின. மொத்தம், ரூபாய் நான்கு கோடியே, 11 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.