செய்திகள் :

வார இறுதி நாள்கள்: 925 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

post image

வார இறுதி தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 22) ஆகிய விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 925 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) 275 பேருந்துகளும், சனிக்கிழமை 320 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள், மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 பேருந்துகள் என மொத்தம் 925 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா

நாடக கலைஞா் டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது வழங்கப்படவுள்ளதாக சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ண கான சபா சாா்பில் நாடக கலைஞா்,... மேலும் பார்க்க

நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தாம்பரத்திலிருந்து நாகா்கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

இன்று 25 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 25 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து... மேலும் பார்க்க

மாம்பழ விவசாயிகள் விவகாரம்: போராட்டம் ஏன்? அதிமுகவுக்கு அமைச்சா் கேள்வி

மாம்பழ விவசாயிகள் பிரச்னை தீா்க்கப்பட்ட பிறகு, போராட்டம் அறிவிப்பது ஏன் என்று அதிமுகவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா சாகுபடி விவசா... மேலும் பார்க்க

சென்னையில் மொபெட்டில் இருந்து விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பு!

சென்னை பெரம்பூரில் மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா். கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) எ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2 விருதுகள்

தில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில், பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவுகளில் சிறந்த சாதனைகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2 விருதுகளை கிர... மேலும் பார்க்க