3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!
மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்குவாதத்தில் ரீபன் தாக்கியதில் ரம்யா கிருஷ்ணன் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

தன் பேத்தியின் உயிரிழப்புக்குக் காரணம் அவரின் கணவர்தான் என்று செல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மாயழகன்.
ஆனால், தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை எனக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சுவரில் புகார் மனுவை மாயழகன் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மனுவில், "பேத்தி ரம்யா கிருஷ்ணனை அவரது கணவர் ரீபன் அடித்து கொலை செய்து விட்டார். செல்லூர் காவல் நிலையத்தில் தன் கணவர் குறித்து ரம்யா கிருஷ்ணன் பலமுறை புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்தான் ரம்யா கிருஷ்ணனை அவரது கணவர் அடித்து கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே என் பேத்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஒட்டப்பட்ட புகாரில் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாயழகன், "என் பேத்தி ரம்யா கிருஷ்ணனிடம், அவள் தயார் கொடுத்து வைத்த வீட்டுமனை பத்திரம் இருந்து வந்தது.
அதைக் கேட்டு அவள் கணவர் அடித்துக் காயப்படுத்தியதில் மருத்துவமனையில் இறந்து விட்டார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வளவு நாட்களாகியும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை. இரண்டு மாதமாகியும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb