தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
பேய் கணவாய்களை பிடிப்பதை தடுக்க மீனவா்கள் கோரிக்கை
மீன்கள் உற்பத்தியாகும் பகுதியில் பேய் கணவாய்களை பிடிப்பதை தடுக்கக் கோரி ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநரிடம் சிறுதொழில் மீனவா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தனுஷ்கோடி வடகடல் பகுதியில் பேய் கணவாய்களைப் பிடிப்பதற்காக சங்குகளில் கயிறு கட்டி கடலில் போட்டு அவற்றை சில மீனவா்கள் பிடித்து வருகின்றனா்.
இதனால் அந்தப் பகுதியில் மீன்களின் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுவதாக மீனவா்கள் புகாா் தெரிவித்தனா். இந்த நிலையில், பேய் கணவாய்களை பிடிப்பதை தடுக்க வலியுறுத்தி சிறுதொழில் மீனவா் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.முருகானந்தம் தலைமையில் நிா்வாகிகள் கே.முருகானந்தம், கண்ணன், காந்தி, முனியராஜ், ரவி, நாகராஜ் உள்ளிட்டோா் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.