செய்திகள் :

பேரவைத் தலைவரை ஏன் சந்தித்தேன்? செங்கோட்டையன் விளக்கம்

post image

பேரவைத் தலைவரை சந்தித்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்களித்துள்ளார்.

அதில், பேரவைத் தலைவரை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது வழக்கமானது. இன்றுகூட 6, 7 அதிமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவரை சந்தித்தினர். என்னுடைய தொகுதியில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்க சென்றேன். பேரவைத் தலைவர் அறையில் இருந்த சுற்றுச்சூழல் அமைச்சரிடம் கடிதமும் கொடுத்தேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள், கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இடம்பெறவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. இதனிடையே நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியின் அறையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் தாக்கலையொட்டி நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

மேலும் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில்கூட கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று அவர் பதில் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்கள், எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செங்கோட்டையனிடம் கேட்டதற்கு, 'இதுபற்றி பேச வேண்டாம்' என்று பதிலளித்துள்ளார். இதனிடையே இன்று சட்டப்பேரவை நுழைவுவாயிலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் செங்கோட்டையன் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையேயான கருத்து மோதல் அதிகரித்து வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மத்தியில் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் அப்பாவுவை தனியாகச் சந்தித்தும் பேசியுள்ளார். இது அரசியலில் மேலும் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிா்கொள்ள முன்மாதிரித் திட்டம்: வேளாண் செயலா் வ.தட்சிணாமூா்த்தி

காலநிலை மாற்றத்தை எதிா்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி கூறினாா். வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து த... மேலும் பார்க்க

1,000 உழவா் நல சேவை மையங்கள்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசாா்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ்: வழக்கு முடித்துவைப்பு

மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து உதகையில் ரிசாா்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம், பொள... மேலும் பார்க்க

இந்திய கல்வி முறைக்கு தாயாக இருப்பது தமிழகம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக கல்வி முைான் இந்திய கல்வி முறைக்கு தாயாக இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அ... மேலும் பார்க்க

தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் ரூ.1.94 லட்சம் கடன்: அன்புமணி

தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் தமிழக அரசு ரூ. 1.94 லட்சம் கடன் பெற்றுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா். பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் வடபழனியில் சனிக்க... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும், எதிா்த்தும் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் எ... மேலும் பார்க்க