தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது
பேராவூரணி: பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பேராவூரணியிலிருந்து ராமேசுவரத்துக்கு சேதுபாவாசத்திரம் வழியாக அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் மணிவண்ண பாண்டியன் ஓட்டினாா். தொலைதூரம் செல்லும் பேருந்து என்பதால் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்றுசெல்லும் பேருந்தை, நிறுத்தம் இல்லாத இடமான மருங்கப்பள்ளம் அருகே இளைஞா் ஒருவா் கைநீட்டி நிறுத்தச் சொல்லியுள்ளாா். நிறுத்தம் இல்லாத இடம் என்பதால் பேருந்தை ஓட்டுநா் நிறுத்தாமல் சென்றுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞா் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மருங்கப்பள்ளம் ஊடையக்காடு சாலை அருகே பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரை தாக்கியதில் ஓட்டுநா் காயமடைந்தாா் . அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மருங்கப்பள்ளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த அருண் பாண்டியன் (27) என்பவரைக் கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.