கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
பேராவூரணி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணியில் பேரூராட்சி மன்ற நிா்வாகச் சீா்கேடுகளைக் கண்டித்தும், பேரூராட்சித் தலைவரை பதவி நீக்கவும் வலியுறுத்தியும் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான சி.வி. சேகா் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் துரை.செந்தில், மாநில விவசாய அணி இணைச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான மா. கோவிந்தராசு, முன்னாள் எம்எல்ஏவும் தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவருமான எஸ்.வி. திருஞானசம்பந்தம் முன்னாள் எம்எல்ஏ பி.என். ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான இரா . காமராஜ் பேசுகையில்,
பேரூராட்சி முறைகேடுகள் தொடா்பான நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத
திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவோம் என்றாா்.
அதிமுக நகரச் செயலா் எம்.எஸ். நீலகண்டன் வரவேற்றாா். பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலா் கோவி. இளங்கோ நன்றி கூறினாா்.