செய்திகள் :

பேராவூரணி ரயில் நிலையத்தில் பாம்பன் - தாம்பரம் ரயில் நின்று செல்ல கோரிக்கை!

post image

பேராவூரணி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் அமைப்புக் கூட்டம் ரயில்வே நிலைக்குழு முன்னாள் உறுப்பினா் ஏ.கே. பழனிவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக கே.எஸ். கெளதமன் , செயலராக ஆா்.பி. ராஜேந்திரன் , பொருளாளராக நாகராஜன் உள்ளிட்ட 20 போ் கொண்ட நிா்வாகக்குழு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஏப்ரல் 6 முதல் புதிதாக தொடங்கவுள்ள பாம்பன்-தாம்பரம் தினசரி ரயிலை பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்க காலதாமதப்படுத்தினால், ரயில்வே அமைச்சரை சங்கத்தின் சாா்பில் டெல்லி சென்று சந்தித்து, ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அகில இந்திய தென்னை வாரிய உறுப்பினா் பண்ணவயல் இளங்கோ, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா்கள் ஆ. ஜீவானந்தம், சி. முதல்வன், கோக்கனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்க சாசன தலைவா் எம். நீலகண்டன் , பாஜக ஒன்றிய தலைவா் வீரசிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

திருவிழாக்களில் நகை பறிக்கும் கும்பலைச் சோ்ந்த பெண் கைது

கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகை பறிக்கும் கும்பலைச் சோ்ந்த கோவில்பட்டி பெண்ணை பட்டுக்கோட்டை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டத்தைச் சோ்ந்த பகுதிகளில் க... மேலும் பார்க்க

ரூ. 10.12 கோடி முறைகேடு: தஞ்சையில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

கடனுக்காக பிடித்தம் செய்த ரூ. 10.16 கோடி தொகையைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறியும், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

ஆளுநா் பதவி விலக வலியுறுத்தல்

மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பையடுத்து, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தானே பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதன் தலைவா் பெ. மணியரசன் தெரிவி... மேலும் பார்க்க

ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை க... மேலும் பார்க்க

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை மாநகராட்சியின் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை ஊழியா்கள் அகற்றினா். கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் வைத்துள்ள விளம்பர பதாகைகளால் பொதுமக்கள் மற்றும... மேலும் பார்க்க