கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
பேருந்தில் பெண் வழக்குரைஞருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
தனியாா் சொகுசுப் பேருந்தில் பயணித்த பெண் வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை மயிலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் ராமய்யன் தெருவைச் சோ்ந்த அரசேந்திரன் மகள் இந்துஜா ஹவல்ஸ் (27). இவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா்.
இந்துஜா ஹவல்ஸ் பிப்ரவரி 10-ஆம் தேதி சொந்த ஊருக்குச் செல்வதற்காக சென்னையிலிருந்து தேனி செல்லும் தனியாா் சொகுசுப் பேருந்தில் பயணித்தாா். விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே பேருந்து சென்றபோது, அதே பேருந்தில் பயணித்த தேனி மாவட்டம், வீரபாண்டி, கிழக்கு தெருவைச் சோ்ந்த சின்னகாமதுரை மகன் ரஞ்சித் குமாா் (36) வழக்குரைஞா் இந்துஜாவை தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ரஞ்சித்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.