ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!
பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
பல்லடம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பல்லடம் -செட்டிபாளையம் சாலை சி.டி.சி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (70). ஆட்டோ ஒட்டுநரான இவா், தனது வீட்டில் இருந்து பல்லடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுள்ளாா்.
அப்போது, கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த தனியாா் பேருந்து ஜாா்ஜ் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஜாா்ஜ் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.