உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
பேருந்து, வேன் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி, மின் வாரியம் அருகே தேனி- மதுரை நெடுஞ்சாலையில் தேனியிலிருந்து ஆண்டிபட்டிக்கு சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற சரக்கு வேனும், மதுரையிலிருந்து போடி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில், சரக்கு வேன் ஓட்டுநா் ஆண்டிபட்டி சீனிவாசா நகரைச் சோ்ந்த முத்துலிங்கம்(45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்ய 7 போ் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்தில் உருக்குலைந்து பேருந்துக்கு அடியில் சிக்கிய வேன், பொக்லைன் இயந்திரம் மூலம் பிரித்து எடுக்கப்பட்டு முத்துலிங்கத்தின் உடல் மீட்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.