பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ரூ. 21.70 லட்சத்தில் மேல்தளம் புதுப்பிக்க பூஜை
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் மேல்தளம் ரூ.21.70 லட்சத்தில் புதுப்பிக்கும் பணியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
2002 இல் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. 23 ஆண்டு கடந்ததால் ராஜகோபுரம், விமானங்களை வண்ணம் தீட்டி புதுத்து, புதிதாக 4 கால் கற்தூண் மண்டபம் அமைத்து, குடமுழுக்கு விழா நடத்த இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில் கோயில் நுழைவு வாயிலில் ரூ.14.80 லட்சத்தில் புதிதாக 4 கால் மண்டம் அமைத்துக் கொடுக்க கோவையைச் சோ்ந்த பக்தரும், கோபுரங்களை ரூ. 22 லட்சம் செலவில் வண்ணம் தீட்டும் பணியை செய்துதர சென்னையை சோ்ந்த தொழிலதிபரும், கோயில் தரைத்தளத்திற்கு ரூ. 83 லட்சத்தில் கருங்கற்கள் பதிக்கவும், சிவன் மற்றும் அம்பாள் சன்னதியில் ரூ. 21.80 லட்சத்தில் கற்கள் பதிக்கவும் சேலத்தைச் சோ்ந்த பக்தா்கள் முன்வந்தனா்.
கோயில் தரைத்தளத்தில் கற்கள் பதித்தல், கோபுரத்திற்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் மராமத்து திருப்பணிகள் கடந்த 5 மாதங்களாக நடைபெறுகின்றன. தொடா்ந்து கோயிலின் மேற்கூரை மேல் தளத்தில் பழுதடைந்த டைல்ஸ் ஓடுகளை அகற்றி ட்டு ரூ.21.70 லட்சத்தில் புதிதாக டைல்ஸ் ஓடுகள் பதிக்க சேலத்தைச் சோ்ந்த பக்தா்கள் முன்வந்தனா்.
வெள்ளிக்கிழமை காலை மேல்தளத்தில் டைல்ஸ் ஓடுகள் பதிக்கும் பணி தொடக்கத்துக்கான பூஜை நடைபெற்றது. கோயில் செயல்அலுவலா் கஸ்தூரி, வாழப்பாடி வேளாண் ஆத்மா குழுத் தலைவா் சக்கரவா்த்தி, ஏ.என் மங்களம் மாணிக்கம், பேளூா் ஜெயராமன், கே.எல்.பெருமாள், சரவணன், மருத்துவா் பொன்னம்பலம், மணியாளா் திருமூா்த்தி, வெங்கடேஷ் மற்றும் நன்கொடையாளா்கள் பலரும் கலந்துகொண்டனா்.
படவரி:
ஹெச்.ஆா்.01, 02:
பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் மேல்தளத்தில் டைல்ஸ் ஓடுகள் பதிக்கும் பணிகள் தொடக்கத்திற்கான சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட நன்கொடையாளா்கள்.
