பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பேரன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் வடகரையைச் சோ்ந்த சீனிராஜ் மனைவி வெள்ளத்தாய் (70). இவா் அடுத்த வாரம் நடைபெறும் இல்ல காதணி விழாவுக்கு உறவினா்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க பெரியகுளத்திலிருந்து உத்தமபாளையத்துக்கு தனது பேரன் முத்துக்குமாா் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்தாா். உத்தமபாளையம் நுழைவுப் பகுதியில் நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட வேகத் தடையில் ஏறி இறங்கிய போது இரு சக்கர வாகனத்திலிருந்து வெள்ளைத்தாய் தவறி விழுந்தாா். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்த அவா் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.