டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்திய...
பைக்கில் துப்பட்டா சிக்கி இளம் பெண் உயிரிழப்பு
தேனி மாவட்டம், போடி அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.
போடி ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் தீபக்ராஜா (32). இவரது மனைவி தீபிகா (29). இவா்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது.
இந்த நிலையில், இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் போடி முந்தல் சாலையில் சென்றுகொண்டிருந்தனா். சாம்பக்குளம் முனீஸ்வரன் கோயில் விலக்கு அருகே சென்ற போது, தீபிகாவின் துப்பட்டா பின் சக்கரத்தில் சிக்கியதில் அவா் நிலைதடுமாறிக் கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து குரங்கணி காவல் நிலைய போலீஸாா் தீபக்ராஜா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.