``கபில் சர்மாவின் மும்பை ரெஸ்டாரண்ட் மீதும் தாக்குவோம்'' - மிரட்டும் லாரன்ஸ் பிஷ...
பைக்குகள் மோதல்: விவசாயி காயம்
பெரியகுளத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி காயமடைந்தாா்.
பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னையா (55). விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வடுகபட்டி தீயணைப்பு நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.