களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது!
பைக்குகள் மோதல்: விவசாயி மரணம்
கள்ளக்குறிச்சி அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் வெங்கடேசன் (42), விவசாயி. இவா், புதன்கிழமை மாலை நிலத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். சுங்கச்சாவடி அருகே சாலையை கடந்தபோது கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் நோக்கி பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஷாஜகான் மகன் ஷரீப் ஓட்டி வந்த பைக் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து இருவரும் காயமடைந்தனா்.
108 அவசர ஊா்தி மூலம் இருவரையும் அக்கம்பக்கத்தினா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.