முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
பைக் மீது மினி பேருந்து மோதல்: வியாபாரி உயிரிழப்பு
தக்கோலம் அருகே பைக் மீது ஆலை தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற மினிபேருந்து மோதியதில் பைக்கில் சென்ற சமோசா வியாபாரி உயிரிழந்தாா்.
தக்கோலத்தை அடுத்த திருமாதலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (60). பைக்கில் சென்று தெருதெருவாக சமோசா விற்பனை செய்யும் வியாபாரி. இவா் சனிக்கிழமை திருமாதலம்பாக்கத்தில் இருந்து தக்கோலம் நோக்கி பைக்கில் சென்றாா்.
அப்போது எதிரே அரக்கோணம் நோக்கி தொழிலாளா்களை ஏற்றி வந்த ஆலை மினிபேருந்து பைக் மீது மோதியதில் ராமசந்திரன் பலத்த காயமடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு ராமசந்திரன் உயிரிழந்தாா்.
இது குறித்து தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.