இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெர...
பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சியில் சாலையைக் கடந்த இளைஞா் மோட்டாா் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் ஏழுமலை (17). இவா், சனிக்கிழமை இரவு 7 மணியளவில் கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம் செல்லும் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையைக் கடந்தாா்.
அப்போது, கள்ளக்குறிச்சி நோக்கி வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதியது. இதில் ஏழுமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த, சங்கராபுரம் வட்டம், சூ.பாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ரமேஷிடம் (28) விசாரணை நடத்தி வருகின்றனா்.