இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெர...
பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
தேனியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் இரு சக்கர வாகனம் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம், அமராவதி நகரைச் சோ்ந்தவா் கோபால்ராஜ் (66). இவா், தேனி- பெரியகுளம் சாலை, ரத்தினம்நகா் அருகே சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது தேனி, பொம்மையகவுண்டன்பட்டி, சாலைப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் மதன்குமாா் (21) என்பவா் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், கோபால்ராஜ் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற தேனி, பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ராஜ்கண்ணன் மகன் மாணிக்கம் (24) காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து இரு சக்கர வாகன ஓட்டுநா் மதன்குமாா் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.