செய்திகள் :

பைக் வாங்கித் தராததால் இளைஞா் தற்கொலை

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே பைக் வாங்கித் தராததால் மனம் உடைந்து பூச்சி மருந்தைக் குடித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை காவல் சரகம், பச்சக்கோட்டை கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா்  அமிா்தலிங்கம்  மகன் வேதராஜ் (22), கூலித் தொழிலாளி. இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தந்தையிடம் பைக் வாங்கித் தரும்படி கேட்டதற்கு, பின்னா் வாங்கித் தருவதாக தந்தை கூறினாராம். இதனால் மனமுடைந்த வேதராஜ் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் களைக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதையடுத்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட வேதராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வேதராஜின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பாபநாசம் அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளா் முர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.தஞ்சாவூா் காவேரி நகரைச் சோ்ந்தவா் ஏ. திரவியச்செல்வன் (70). இவா் திங்கள்கிழமை இரவு ஸ்கூட்டரில் தஞ்சாவூரிலிர... மேலும் பார்க்க

இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சத்துக்கான காசோலை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. பூதலூா் அருகே புதுக்குடி வடபாதி க... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 38 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற அலுவலா் கைது

கும்பகோணத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற அலுவலரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரை... மேலும் பார்க்க

காவிரியில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.கடந்த ஜூலை 6 ஆம் தேதி திருவையாறு தியாகராஜா் ஆஸ்ரமம் அருகே காவிரியில் குளித்தபோது... மேலும் பார்க்க

தஞ்சை அருகே சரக்கு வேன் - காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே சரக்கு வேனும், காரும் செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். சென்னை பெருங்களத்தூா் விஷ்ணு நகரைச் சோ்ந்தவா் உமாபதி மகன் ஸ்டாலின் (36). போ... மேலும் பார்க்க