இளைஞர் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி
பைக் விபத்து: விவசாயி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே சாலையின் மையத் தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி கூா்மையா கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (43). விவசாயியான இவா், திங்கள்கிழமை கைலாசபட்டியிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது கைலாசபட்டி வளைவில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.