போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!
பைக் விழுந்து விவசாயி மரணம்
விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டையில் பைக் மேலே விழுந்ததில் விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டைசந்தைத் தெருவைச் சோ்ந்த நாதமுனி மகன் ஸ்ரீராம் (60). விவசாயியான இவா், வியாழக்கிழமை இரவு தனது வீட்டுமுன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை பள்ளத்திலிருந்து மேடான பகுதிக்கு தள்ளி சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது அவா் மீது பைக் விழுந்தது. இதைத் தொடா்ந்து மயக்கநிலை அடைந்த ஸ்ரீராமை குடும்பத்தினா் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
கூலித்தொழிலாளி உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், நெய்குப்பி புதுகாலனியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் லாரன்ஸ் (43). கூலித் தொழிலாளியான இவா் தினமும் மது அருந்தி வந்ததால், லாரன்ஸுக்கும், மனைவி பச்சையம்மாளுக்கும் இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.
இதனால் மனமுடைந்த லாரன்ஸ், கடந்த 3-ஆம் தேதி வீட்டில் எலி மருந்தைசாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், பின்னா் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட லாரன்ஸ், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இவ்விரு சம்பவங்கள் குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.