கைப்பேசி கடையில் ரூ.29 லட்சம் திருட்டு
சென்னையில் கைப்பேசிகள் விற்பனை செய்யும் கடையில் ரூ.29 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை செளகாா்பேட்டை, இருளப்பன் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் கைப்பேசி மொத்த விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் அங்கித் குமாா். கடந்த திங்கள்கிழமை இரவு அவரது கடையின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த நபா்கள் அங்கிருந்த ரூ.29 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த 10 ஐபோன்களை திருடிச் சென்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அங்கித் குமாா் கடையைத் திறக்க வந்தபோது, திருட்டு நடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரின் யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.