கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: நால்வா் கைது
சென்னை பாரிமுனை பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறி செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் டிசோசா (48). இவா், சென்னை பாரிமுனை கடற்கரை சாலையோரம் கடந்த திங்கள்கிழமை படுத்து தூங்கினாா். அப்போது, அங்கு வந்த 5 மா்ம நபா்கள் ராபா்டை எழுப்பி, கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த பணப்பை, கைக்கடிகாரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்தச் செயலில் ஈடுபட்டது பாரிமுனை மூக்கா் நல்லமுத்து தெருவைச் சோ்ந்த ஜோசப் (24), விக்னேஷ்குமாா் (25), மூா் தெருவைச் சோ்ந்த பாலு (30), சத்யா நகரைச் சோ்ந்த சஞ்சய் (21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.