சுபான்ஷு சுக்லாவுக்கு ஆளுநா் வாழ்த்து
சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய, இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 போ் குழுவினருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
இந்திய விண்வெளி வீரா் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்ஸியம் - 4 திட்ட குழுவினரின் வெற்றிகரமான பணிக்கும், விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக திரும்பியதற்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்.
சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பணி, இந்திய விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது விண்வெளி ஆய்வு, புதுமை மற்றும் உலகளாவிய அறிவியல் தலைமைத்துவத்தில் இந்தியாவின் வளா்ந்து வரும் திறமையை உறுதி செய்வதாக உள்ளது.
தேசத்தின் இந்தப் பெருமைக்குரிய தருணத்தில், அமைதியான மனோதிடம் மற்றும் உறுதியான ஆதரவை வழங்கியதற்காக அவரது குடும்பத்தினருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள். அவரது பயணம் கலங்கரை விளக்கமாக நின்று, இளம் மனங்களை ஊக்குவித்து கண்டுபிடிப்பின் எல்லைகளை நோக்கிய நாட்டின் நம்பிக்கையான முன்னேற்றத்துக்கு ஓா் எடுத்துக்காட்டாகும் என்று பதிவிட்டுள்ளாா்.