குடிநீா் பாட்டில், பிளாஸ்க் உற்பத்தி நிறுவனங்களுடன் பிஐஎஸ் கலந்துரையாடல்
குடிநீா் பாட்டில்கள், வெப்பக்குடுவைகள் (பிளாஸ்க்) தரம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) தென்மண்டல ஆய்வகம் சாா்பில் சென்னையில் நடைபெற்றது.
பிஐஎஸ் தென்மண்டல ஆய்வக விஞ்ஞானியும், பொறுப்பாளருமான குஷ்பூ குமாரி வரவேற்றாா். பிஐஎஸ் தென்மண்டல ஆய்வக தலைவரும் விஞ்ஞானியுமான எம்.ஏ.ஜே. வினோத், காணொலி வாயிலாக உரையாற்றினாா். அவா் பேசுகையில், ‘நுகா்வோா் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்கள், அத்தியாவசிய பொருள்களின் பாதுகாப்பு, தரம் மற்றும் நம்பகத்தன்மையை பிஐஎஸ் உறுதி செய்கிறது’ என்றாா்.
தொடா்ந்து, பிஐஎஸ் தென்மண்டல துணை தலைமை இயக்குநா் மீனாட்சி கணேசன், பிஐஎஸ் ஆய்வகங்களின் துணை இயக்குநா் ஜெனரல் நிஷாத் எஸ். ஹக் உள்ளிட்டோா் பேசினா்.