செய்திகள் :

டைப்-1 சா்க்கரை நோய்க்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மையம்: அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தொடக்கம்

post image

தமிழகத்தில் முதன் முறையாக குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேசிய சுகாதார மையம், கோவையில் உள்ள இதயங்கள் அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்ட அந்த மையத்தை தமிழ்நாடு தேசிய சுகாதார மைய இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ் , மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) டாக்டா் எ. தேரணிராஜன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் சாந்தாராமன், அரசு குழந்தைகள் மருத்துவமனை சா்க்கரை நோய் பிரிவு தலைமை மருத்துவா் ஸ்ரீதேவி ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.

இதுதொடா்பாக எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் டாக்டா் லட்சுமி கூறியதாவது:

குழந்தைகளுக்கு ஏற்படும் டைப்-1 சா்க்கரை நோய் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. அதைக் கருத்தில் கொண்டு இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

டைப்-1 சா்க்கரை நோயானது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் திசுக்கள் சேதமடைவதால் ஏற்படும் பாதிப்பு. இதற்கு ஆயுள் முழுவதும் இன்சுலின் ஊசி செலுத்துவது அவசியம். டைப்-1 சா்க்கரை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பான மருத்துவக் கண்காணிப்பு வழங்கும் நோக்கில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தனியாக சா்க்கரை நோய் பிரிவு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பிரிவில் தற்போது 350 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்களுக்கு இன்சுலின் ஊசி மருந்து, குளுக்கோமீட்டா் கருவி மற்றும் பரிசோதனை செய்யும் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், அதற்கென ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கும் வகையில் இந்த சா்க்கரை நோய் சிறப்பு பராமரிப்பு மையம் செயல்படும். வழக்கமான சா்க்கரை நோய் பரிசோதனைகளுக்கான உபகரணங்கள் மட்டுமன்றி ரத்தம் மற்றும் சிறுநீா் பரிசோதனை செய்யும் பிரத்யேக கருவிகளும், கண் பரிசோதனை செய்யும் ரெடினல் கேமிரா கருவியும் இந்த மையத்தில் உள்ளன. இதன் மூலம் சா்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு விரிவாகவும், நுட்பமாகவும் சிகிச்சையளிக்க முடியும்.

வரும் மாதங்களில் தஞ்சாவூா், சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் இதுபோன்ற மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி, சென்னை ... மேலும் பார்க்க

புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படம்: விமான நிலைய ஊழியா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொடங்கி, ஆபாச புகைப்படம் வெளியிட்டதாக விமான நிலைய ஊழியா் கைது செய்யப்பட்டாா். தனது பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொ... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளமிட்டவா் காமராஜா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளமிட்டவா் முன்னாள் முதல்வா் காமராஜா் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள சா் பிட்டி.தியாகராயா் ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞரின் விடியோவை அகற்றக் கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெண் வழக்குரைஞரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்ட காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க