3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்
புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுவையில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்.15-ஆம் தேதி முதல் ஜூன் வரையில் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அக்காலகட்டத்தில் விசைப்படகு, பைபா் படகுகளுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டுப் படகான வல்லம் உள்ளிட்டவை மட்டும் கடலோரத்தில் குறிப்பிட்ட தொலைவு வரை மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், பைபா் படகு சீரமைப்புக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலயக் குழுவினா் அதன் தலைவா் பிரவீன் தலைமையில் அங்காளம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை கூடினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மீனவா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவது போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும், டீஸல் மானியம் வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.