`இவங்க பொற்கால ஆட்சியில், நாங்க குடைச்சல் கொடுக்கறோம்னு..!’ - சிபிஎம் பெ.சண்முகம...
பொங்கல் திருநாள்: பூக்கள் விலை உச்சம்
பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், திருநெல்வேலியில் பூக்களின் விலை உச்சம் தொட்டது. கிலோவுக்கு பிச்சி ரூ.2500, மல்லிகை ரூ.2200 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டன.
இந்துக்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான பொங்கல் விழா, மாட்டுப்பொங்கல் விழா, உழவா் திருநாள் ஆகியவை செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் (ஜன.14-16) மூன்று நாள்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள்களில் வீடுகளில் கரும்பு, மஞ்சள் கிழங்கு கட்டி பொங்கல் வைத்து சூரியனுக்கு வழிபாடு செய்வா்கள். மேலும், விவசாயிகள் கால்நடைகளை வா்ணம் பூசி வழிபாடு செய்வா்கள். அதே போல் உழவா் திருநாளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனால் பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு பூ மாா்க்கெட்டில் திங்கள்கிழமை பூக்கள் வரத்து மிக குறைவாகவே இருந்ததால் விற்பனைக்கு வந்த பூக்கள் அனைத்தும் வேகமாக விற்று தீா்ந்தன. திங்கள்கிழமை நிலவரப்படி(1கிலோவுக்கு) பிச்சி ரூ.2500, மல்லிகை ரூ.2200 விற்பனையாயின. அதே நேரத்தில் சம்பங்கி ரூ.200, அரளிப்பூ ரூ. 300, மரிக்கொழுந்து ரூ.300, துளசி ரூ.50, கோழி ரூ.100, கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.100, கேந்தி பூ ரூ.50 என்ற அடிப்படையில் விற்பனையாகின.