குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
பொங்கல் தொகுப்பை நாளை வரை பெற்றுக்கொள்ளலாம்
கோவை: குடும்ப அட்டைதாரா்கள் நாளை (ஜனவரி 18) வரை பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு பொங்கல் விழாவை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பை வழங்க உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கடந்த 9 முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரா்கள் வரும் 18-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருப்பதால், கோவையில் இதுவரை பொங்கல் தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரா்கள் நாளைக்குள் (சனிக்கிழமை) பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.