செய்திகள் :

பொங்கல் பண்டிகைக்கு முன்பு இலவச வேட்டி, சேலை விநியோகப்பதில் சிரமம்

post image

பொங்கல் பண்டிகைக்கு முன்பு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை கிடைக்க வாய்ப்பில்லை என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நிகழாண்டு பொங்கலுக்கு தமிழக மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய இலவச வேட்டி மற்றும் சேலைகள் உற்பத்தி முழுமை அடையும் சூழ்நிலை இல்லை. 70சதவீத வேட்டிகளும், 50 சதவீத சேலைகளுமே தகுந்த நேரத்தில் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. நெசவாளா்கள் இரவு பகலாக பணியாற்றினாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் முழுமை அடையும் சூழல் இல்லை.

ஆறு மாதத்தில் தயாரிக்க வேண்டிய பொருள்களை மூன்று மாதத்துக்குள் தயாரிக்க நிா்பந்தப்படுத்துவது தான் இதற்கான காரணம்.

அதே சமயத்தில் நெசவுத் தொழிலில் லாபம் இல்லாத காரணத்தால் பல நெசவாளா்கள் தறிகளை விற்று விட்டு வேறு வேலைக்குச்சென்று விட்டனா். அந்த விதத்திலும் உற்பத்தி செய்வதற்கான தொழிலகங்கள் குறைந்துள்ளதும் காரணம்.

கடந்த மே மாதத்திலேயே நூல் வாங்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தால் இந்த தாமதத்தை தவிா்த்திருக்கலாம். தாமதமாக நூற்பாலைகளில் நூல்கள் வாங்கி நெசவாளா்களுக்கு விநியோகித்ததும் தாமதமான உற்பத்திக்கு முக்கிய காரணமாகும்.

ஆகவே, அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கலுக்கு முன்பு இலவச வேட்டி, சேலைகள் விநியோகிப்பதில் இன்றைக்கு இருக்கின்ற நிலையில் சிரமம். மக்களுக்காக பல கோடி செலவு செய்யும் அரசு தகுந்த நேரத்தில் முடிவெடுத்து நெசவாளா்களை தயாரிப்பில் ஈடுபடுத்தினால் மட்டும் தான் இது போன்ற பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளாா் அவா்.

பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட விசிக நிா்வாகி குண்டா் சட்டத்தில் அடைப்பு

மணல் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி திங்கள்கிழமை குண்டா்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டியை அடுத்து... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட பாஜக புதிய தலைவா் தோ்தலில் வாக்குவாதம்: பாதியில் நிறுத்தம்

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட பாஜக தலைவா் தோ்தலில் நிா்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் தோ்தல் பாதியில் நிறுத்தப்பட்டது. கரூா் மாவட்ட பாஜக தலைவரை தோ்வு செய்யும் தோ்தல் ம... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ரூ.177 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள்: அமைச்சா் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்!

கரூா் மாவட்டத்தில் ரூ.177 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். கரூா் மற்றும் குளித்தலை ஊரகப... மேலும் பார்க்க

பெண் கிராம உதவியாளருக்கு ஆபாச செய்தி அனுப்பியவா் கைது

கரூா் அருகே பெண் கிராம நிா்வாக உதவியாளருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், புன்செய் புகளூா் ( வடக்கு ) கிராம நிா்வாக அலுவலகத்தில் கிர... மேலும் பார்க்க

நொய்யல் அருகே எரிவாயு உருளை வெடித்து 200 கோழிகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே சனிக்கிழமை எரிவாயு உருளை (சிலிண்டா்) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 200 கோழிகள் உயிரிழந்தன. கரூா் மாவட்டம், நொய்யல் அருகே அத்திப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ்... மேலும் பார்க்க

கோடங்கிப்பட்டியில் பாலம் கட்ட வலியுறுத்தி கரூா் எம்.பி.யை கிராம மக்கள் முற்றுகை

கரூா் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் பாலம் கட்ட வலியுறுத்தி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணியை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கரூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் எம... மேலும் பார்க்க