இலங்கையுடனான டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து
பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் வணங்கான்?
வணங்கான் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான்.
படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி சில மாதங்களுக்கு மேல் ஆகியும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதையும் படிக்க: மறுவெளியீடாகும் சச்சின்!
சமீபத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விடாமுயற்சி, கேம் சேஞ்சர் உள்ளிட்ட பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் வணங்கானுக்கு அதிக திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்ற தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.