செய்திகள் :

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

post image

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்அளித்திருந்தன. ஆனால், 2023-24 நிதியாண்டில் இது ரூ.27,830 கோடியாக உயா்ந்துள்ளது. இது 32.7 சதவீத உயா்வாகும். இந்த ரூ.27,830 கோடி ஈவுத் தொகையில் 65 சதவீதமான ரூ.18,013 கோடி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. ஏனெனில், பொதுத் துறை வங்கிகளின் பெரும்பான்மையான பங்குகளை மத்திய அரசே வைத்துள்ளது.

நாட்டில் மொத்தம் 12 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. 2023-24 நிதியாண்டில் அவற்றின் லாபம் ரூ1.41 லட்சம் கோடியாகும். இதில் எஸ்பிஐ பங்களிப்பு மட்டும் ரூ.61,077 கோடி (40 சதவீதம்) ஆகும். முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ லாபம் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022-23 நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மட்டும் மத்திய அரசுக்கு ரூ.13,804 கோடியை பங்கு ஈவுத்தொகையாக அளித்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (228 சதவீதம்), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (62 சதவீதம்), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (61 சதவீதம்) ஆகியவற்றின் லாபமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 2018 நிதியாண்டில் ரூ.85,390 கோடி நஷ்டத்தை சந்தித்த பஞ்சாப் நேஷல் வங்கி இப்போது லாபத்தின் வளா்ச்சியில் சாதனை படைத்துள்ளது.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க