முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
பொதுப் பணித் துறை அலுவலா் வீட்டில் நகைகள்,ரொக்கம் திருட்டு
தஞ்சாவூா் அருகே பொதுப் பணித் துறை அலுவலா் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பாலகிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் நாகசுந்தரம் மனைவி உமாராணி (53). இவா் திருவாரூரில் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இவா் நாள்தோறும் காலையில் தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்கு பணிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.
இவா் ஜூலை 18-ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றாா். பின்னா், இரவு 7 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய இவா், முன் பக்கக் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
மேலும், அறையிலுள்ள பீரோவும் உடைக்கப்பட்டு, 14 பவுன் நகைகள், ரூ.17 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.