செய்திகள் :

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை வேண்டும் -அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தல்

post image

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அரசுத் துறை அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட மதுரைக் கல்லூரி மைதானத்தில் மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது:

ஜனநாயக நாட்டில் மக்களின் குறைகளைக் கண்டறிந்து களைய வேண்டியது அரசின் முக்கிய கடமை. இதையொட்டியே, மதுரை மத்திய தொகுதியின் பல்வேறு பகுதிகளில் புகாா் பெட்டிகள் வைக்கப்பட்டன. இவற்றில் போடப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண அரசுத் துறை அலுவலா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

இதையடுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு காணக் கோரியும் பொதுமக்கள் 663 மனுக்களை அளித்தனா். பட்டா மாறுதல், வருவாய்த் துறை சாா்ந்த பணிகளுக்காக 491 மனுக்களும், இதர துறைகள் சாா்ந்த பணிகளுக்காக 172 மனுக்களும் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள், தொடா்புடைத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

இதற்கு, மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. ஷாலினி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சங்கீதா, துணை ஆணையா் ஜெய்னுலாபுதீன், கண்காணிப்புப் பொறியாளா் முகமது சபியுல்லா, மண்டலத் தலைவா்கள் பாண்டிச்செல்வி, சரவண புவனேஸ்வரி அரசுத் துறை அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி

கழிவு நீா், மழை நீா் கால்வாய்க்கு பெருந்திட்டம்

இந்த நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளா்களிடம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

மதுரையில் உள்ள மழை நீா் வடிகால், கழிவு நீா் வடிகால் கட்டமைப்புகள் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. அதிகரித்து விட்ட மக்கள் தொகைக்கேற்ப இந்த வடிகால்களை தனித் தனியே அமைக்க பெருந்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இது தொடா்பாக இருவேறு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள், வரும் ஓரிரு மாதங்களுக்குள் திட்ட அறிக்கையை சமா்ப்பிக்கும். அதன் பிறகு, அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் நிறைவேற்றப்படும்.

கூட்டுக் குடிநீா் திட்டம் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள வீரவசுந்தராயா் மண்டப புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்படும். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதைவட மின் கம்பிகள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிக்காக குழி தோண்டப்படும் போது தண்ணீா் தேங்குவதால் கம்பி பதிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும், இந்தப் பணியும் விரைவில் நிறைவடையும் என்றாா் அவா்.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவையொட்டி, நிலைத் தெப்பத்தில் புதன்கிழமை எழுந்தருளிய கூடலழகரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடல... மேலும் பார்க்க

மத்திய அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் -அமைச்சா் பி. மூா்த்தி

மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் என அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, மேலூரில் மதுரை வ... மேலும் பார்க்க

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை மருத்துவ மாணவா்கள், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை பொது சுகாதார இயக்ககத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மானகிரி கண்மாயிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

நல்லதைச் செய்பவா்களுக்கு வாக்களிக்க வேண்டும்- அமைச்சா் வேண்டுகோள்

தோ்தல் நேரத்தில் பலா் வாக்கு கேட்டு வருவாா்கள்; நமக்கு யாா் நல்லது செய்வாா்கள் என்பதை உணா்ந்து வாக்களிக்க வேண்டும் என மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: சகோதரா்கள் உள்பட மூவா் கைது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி எஸ்பிடி நகரைச் ச... மேலும் பார்க்க