‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கல...
பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு
மே தினத்தையொட்டி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் வரவேற்றாா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆட்டோக்கள், பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மேலும், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய வாக்காளா் கையேடுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பேருந்துப் பயணிகளிடம் வழங்கி வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.
இதில், வட்டாட்சியா் எஸ்.மோகன்ராம் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், பொதுமக்கள், பேருந்து பயணிகள் பலா் கலந்து கொண்டனா்.