செய்திகள் :

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

post image

பொன்னேரி அருகே மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி அந்தரத்தில் அரசுப் பேருந்து தொங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பேருந்து தடம் எண் T40 சனிக்கிழமை காலை வழக்கம் போல் மீஞ்சூர் சென்று விட்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தது.

வெள்ளிக்கிழமை இரவு முதல் பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது.

அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து.

மழையின் காரணமாக இரு சக்கர வாகனங்களில் பால் மற்றும் நாளிதழ்கள் விநியோகம் செய்வோர் பெரிதும் அவதியுற்றனர்.

இந்த நிலையில் T40 அரசுப் பேருந்து காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி ஒரு சக்கரம் கீழே இறங்கி பேருந்து அந்தரத்தில் நின்றது.

இதனால் பேருந்தில் இருந்த 8 பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்டோர் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.

பேருந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் சிக்கி ஒரு சக்கரத்தின் ஒருபுறம் வயல்வெளியில், மறுபுறம் சாலையிலும் என அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீஸார் மற்றும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பொன்னேரி பணிமனை அதிகாரிகள் அங்கு சென்று அந்தரத்தில் தொங்கும் பேருந்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்தின் முன் சக்கரம் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மழையின் காரணமாக பேருந்தில் அதிக பயணிகள் பயணம் செய்யாததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

A government bus was left hanging at mid-air after the driver lost control due to rain near Ponneri

மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட வேண்டும்- தமிழிசை

மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்று தென் சென்... மேலும் பார்க்க

மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு: விஜய்

மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.மதுரை மாநாடு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகோன்னதம் கொண்டு மனம் நிரம்பித் ததும்பி வழியும்... மேலும் பார்க்க

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 15,850 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வ... மேலும் பார்க்க

தவெக தொண்டர்கள் மறைவுக்கு விஜய் இரங்கல்!

தவெக மாநாட்டின்போது உயிரிழந்த தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் வியாழக்கிழமை(ஆக. 21) மாலை நடைபெற்றது. தவெக மாநா... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7.30 மணி வரை கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்கா... மேலும் பார்க்க

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு!

முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் ... மேலும் பார்க்க