கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு...
பொன்னேரி பகுதியில் 221 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் 221 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடைபெற்றன.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, மீஞ்சூா் பகுதிகளில் 6 அடி முதல் 9 அடி வரை விநாயகா் சிலை வைத்து யாகங்கள், பூஜைகள் செய்து வழிபட்டனா்.
இதே போன்று மீஞ்சூா் பகுதியில் 49 இடங்களில் காட்டூா் பகுதிகளில் 39 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை ஏராளமானோா் வணங்கி வழிபட்டனா்.
அத்துடன் பொன்னேரி காவல் எல்லைக்குட்பட்ட 39 இடங்கள், திருப்பாலைவனம் பகுதியில் 24 இடங்கள், சோழவரம் பகுதியில் 70 இடங்களில் மொத்தம் 221 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்து விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.