திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி திருவாரூரில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வனத்துறை அமைச்சா் க. பொன்முடி பெண்கள் குறித்து அவதூறான கருத்துவரும் வகையில் அவா் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் பேசியிருந்தாா். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அவா் வகித்த கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்து நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.
இதற்கிடையே, அவரை அமைச்சா் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். அந்த வகையில், வனத்துறை அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவா் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணியின் மாவட்ட அமைப்பாளா் விக்னேஷ், நகர அமைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டச் செயலாளா் கே. ரவி, மகளிா் அணி மாவட்டத் தலைவா் ரமாமணி, குடவாசல் வடக்கு ஒன்றியத் தலைவா் லோகநாயகி, திருச்சி கோட்ட இந்து முன்னணி பொறுப்பாளா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.