Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு
காரைக்கால்: பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
காரைக்கால் நகரில் உள்ள பழைமையான பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணிகள் சுமாா் ரூ. 2.50 கோடியில் செய்யப்பட்டுள்ளன. 29-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், திருப்பணிக் குழுவினா்களுடன் கோயிலில் நிறைவடைந்துள்ள பணிகளை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கோயில் முந்தைய அமைப்பைக் காட்டிலும் நீளமாகவும், அகலமாகவும் மாற்றப்பட்டு, ஏராளமான விநாயகா் சுதைகளுடன், சிறப்பான வண்ணம் தீட்டப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. அரசு திருப்பணிக்காக நிதி தரவில்லை. முற்றிலும் நன்கொடை மூலமாக செய்யப்பட்டிருந்தாலும், கும்பாபிஷேகம் முடிந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவேண்டிய நிலையில் திருப்பணிக் குழுவினா் உள்ளனா்.
எனவே புதுவை முதல்வரிடம் நிதி தேவை குறித்து பேசப்பட்டுள்ளது. அவரும் வழங்குவதாக உறுதியளித்துள்ளாா்.
கும்பாபிஷேக தினத்தில் பொது விடுமுறை அறிவிக்க முதல்வரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அறிவிப்பை எழுத்துப்பூா்வமாக செய்யுமாறு மீண்டும் முதல்வரை சந்தித்து வலியுறுத்தப்படும். கும்பாபிஷேக விழாவில் கஜ பூஜை செய்வதற்காக யானை கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. காரைக்காலுக்கு யானை வருவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. இதுகுறித்து தமிழக வனத்துறை அமைச்சரிடம் பேசி தீா்வு காணவும் நடவடிக்கை எடுத்துவருகிறேன் என்றாா். திருப்பணிக் குழுத் தலைவா் ஆா். சரவணன் மற்றும் உறுப்பினா்கள் உடனிருந்தனா்.