செய்திகள் :

‘காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள்’

post image

காரைக்கால்: காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புவதாக புதுவை பாஜக கூறியுள்ளது.

காரைக்காலில் புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி :

புதுவையில் 2016- 2021 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மக்கள் எந்த பயனையும் அடையவில்லை. அப்போதைய முதல்வா் நாராயணசாமி, துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை குறை கூறுவதிலேயே காலத்தை தள்ளிவிட்டாா். திட்ட மேம்பாட்டுக்கான நிதி பயன்படுத்தப்படாமலேயே திரும்பிவிட்டது. இதனால் காங்கிரஸை புறந்தள்ளி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை மக்கள் ஆதரித்தனா்.

மத்திய, மாநில நிதியில் புதுவை மாநிலம் முழுவதும் ஏராளமான திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. புதுவையில் அனைவரும் சமமாகவும், தரமான கல்வி கற்கும் விதமாக சிபிஎஸ்இ திட்டத்தை அமல்படுத்தியது அரசு.

இந்த ஆட்சியில் காரைக்காலில் 319 ஆசிரியா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். 250-க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 500 கோடியில் மருத்துவமனை கட்டுமானம் நடைபெறுகிறது. மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.150 கோடிக்கு வளா்ச்சித் திட்டம் வரவுள்ளது. பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானம் நடைபெறவுள்ளது.

எனவே, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியதை மக்களிடம் கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்கு கோரும். காங்கிரஸை மக்கள் ஏற்கெனவே புறக்கணித்துவிட்டனா். அவா்களுக்கு இனிமேல் ஆதரவு தரமாட்டாா்கள் என்றாா். பேட்டியின்போது மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ் உடனிருந்தாா்.

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

காரைக்கால்: கைப்பேசிக்கு வரும் புதிய குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம் என இணைய குற்றத் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் இணையக் குற்றத் தடுப்பு காவல் பிரிவு அலுவலகம் திங்கள... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு

காரைக்கால்: பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் நகரில் உள்ள பழைமையான பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து போராட்டம்

காரைக்கால்: உள்ளாட்சி இயக்குநா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். போராட்டத்திற்கு கூட்டுப் போரா... மேலும் பார்க்க

கடலில் ரோந்துக்கு செல்ல தயாராகும் படகு

காரைக்கால்: நீண்ட காலமாக பழுதால் முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில், பழுது நீக்கும் பணி நிறைவடைந்து ரோந்துக்காக ஆற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது. காரைக்காலில் 15... மேலும் பார்க்க

குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்கால்: வீடுகள், நிறுவனங்களில் தினமும் முறையாக குப்பைகளை வாங்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தொ... மேலும் பார்க்க